Freelancer / 2025 மே 18 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், சார்மினார் பகுதியில் உள்ள நகை கடையில் ஞாயிற்றுக்கிழமை (18) காலை 6.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில், 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு மொகல்புரா, கவுலிகுடா பகுதியில் இருந்து 11 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் நெருக்கம் நிறைந்த பகுதியாகும். இதனால் கட்டிடத்தின் பெரும்பாலான பகுதியை தீ ஆக்கிரமித்ததால் அங்கிருந்தவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து அருகில் இருந்த வேறொரு கட்டிடத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சென்றனர். இருப்பினும் மேல் தளங்களில் கடுமையாக தீ பரவியதால் தீயில் சிக்கியும், புகை மூட்டத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டும் சிறுவர்கள் உளட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மின்சார கசிவினால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
9 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
2 hours ago