2025 ஜூலை 19, சனிக்கிழமை

நண்பர்களுக்கு காதலியை விருந்தாக்கிய காதலன்

Freelancer   / 2023 ஜூன் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இளைஞனும் மாணவியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில்  மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் அழைத்துச் சென்று அவருடன் உல்லாசமாக இருந்தார். ​அதனை தனது அ​லைபேசியில் வீடியோவாக பதிவு செய்தார்.   அந்த வீடியோவை தனது நண்பர்கள் 2 பேருக்கு இளைஞன் அனுப்பி வைத்தார்.

வீடியோவை பார்த்த இளைஞனின் நண்பர்கள் 2 பேரும் மாணவியை அடைய திட்டமிட்டனர். தங்களுடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என கூறினர். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தார். மறுப்பு தெரிவித்தால் காதலனோடு தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவோம் என மாணவியை மிரட்டினர். இதனால் பயந்து போன மாணவி காதலனின் 2 நண்பர்களுடனும் உல்லாசமாக இருந்தார்.

அதனையும் வீடியோவாக பதிவு செய்தனர். மேலும் அவர்களின் நண்பர்கள் 3 பேருக்கு வீடியோவை அனுப்பி வைத்தனர். அவர்களும் வீடியோவை காட்டி மிரட்டி மாணவியை பலாத்காரம் செய்தனர். கடந்த ஒரு ஆண்டாக காதலனின் நண்பர்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் விரக்தி அடைந்த மாணவி இது குறித்து அவரது உறவினர் ஒருவரிடம் தெரிவித்தார். 

விவகாரம் பொலிஸின் காதுகளுக்கு எட்டவே, மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரை கூட்டு பாலியல் பலாத்காரம், மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் கைது செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X