2025 ஜூலை 19, சனிக்கிழமை

நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசளித்த நடிகர் விஜய்

Janu   / 2023 ஜூன் 18 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை   பெற்ற மாணவ- மாணவிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் நிகழ்ச்சியில், 1700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

விஜய் பேசுகையில், உங்கள் குணத்தை நீங்கள் இழந்துவிட்டால் அனைத்தையும் இழந்து விடுவீர்கள், நம் விரலை வைத்து நமது கண்ணை குத்தும் செயல் தான் தேர்தல், நாளைய வாக்காளர்களான நீங்கள் சரியான தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். மாணவர்கள் அம்பேத்கரைப் படிக்க வேண்டும், பெரியாரைப் படிக்க வேண்டும், காமராஜரைப் படிக்க வேண்டும் என பேசினார்.

இந்நிலையில், 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற நந்தினிக்கு சான்றிதழுடன் வைர நெக்லஸ் பரிசாக வழங்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X