Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 நவம்பர் 10 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேலம்
சேலத்தில் மசாஜ் நிலையமொன்றை நடத்திய,வங்கதேசப் பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவர் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததும், அது அறிந்தும்பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, நடவடிக்கை எடுக்கத் தவறிய எஸ்ஐ உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
வங்கதேசத்தைச் சேர்ந்த 27வயதுடைய பெண்,சேலம் சங்கர் நகரில் மசாஜ் நிலையமொன்றை நடத்தி வந்தார். இவர், குமாரசாமிப் பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இதேவேளை, கடந்த மாதம் இவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. மேலும், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு சென்ற பொலிஸார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பரணில் இருந்த சூட்கேஸில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வங்கதேசத்தைச் சேர்ந்த 27வயதுடைய பெண், அழுகிய நிலையில் சடலமாக இருந்தார்.
இதுதொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், குறித்த பெண் தனதுமசாஜ் நிலையத்தில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இப்பெண்ணின்ஆண் நண்பர் என சந்தேகிக்கப்படும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அவரது மசாஜ் நிலையத்தில் பணிபுரிந்த மற்றுமொருவரும் தலைமறைவாகினர்.
தொழில் போட்டி அல்லது அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடிக்க கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்தனர். தலைமறைவான இருவரையும் பொலிஸார் தேடியபோது அவர்கள் வங்கதேசத்துக்கு தப்பிச் சென்றது தெரிந்தது.
இதனிடையே, குறித்தபெண் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவருடன் நான்கு பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் இருந்ததை இக்கொலை வழக்கை விசாரித்த மாநகர துணை ஆணையர் தலைமையிலான பொலிஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, இவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
8 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Aug 2025