2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

நாகை மீனவர்கள் இலங்கை நீதிமன்றில் விடுதலை

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 16 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாகப்பட்டினம்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை மீனவர்கள் 23 பேரை, இலங்கை நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.

நாகை, அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த இருவருக்கும் சொந்தமான இரண்டு விசைப் படகுகளில், கடந்த மாதம் 11ஆம் திகதி, 23 மீனவர்கள், நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றனர். ஆழ்கடல் பகுதியில்,   13ஆம் திகதி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டியதாக, இலங்கை கடற்படையினர் கைது செய்து, பருத்தித்துறை சிறையில் அடைத்தனர்.

நேற்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 23 பேரையும் விடுதலை செய்த நீதிமன்றம், மீனவர்களின் இரண்டு படகுகளையும் அரசுடைமையாக்க உத்தரவிட்டது. விடுவிக்கப்பட்ட மீனவர்களை, அந்நாட்டு அதிகாரிகள், யாழ்ப்பாணம், இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .