Ilango Bharathy / 2022 நவம்பர் 23 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே, மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான ராகுல்ராஜ்.
இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுமியொருவரைக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இக்காதல் குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர், ”தங்களது மகளுக்கு ராகுல்ராஜ் காதல் தொல்லைக் கொடுப்பதாக” திருவாரூர் மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் ராகுல்ராஜை அழைத்து விசாரித்த பொலிஸார், அவரை நிர்வாணப்படுத்தி அடித்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்த ராகுல்ராஜ் வீட்டிலிருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து உயிரை மாய்க்க முயன்றுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு திருவாரூர் அரச மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல்ராஜ் உயிரிழந்தார்.
இதையடுத்து ராகுல்ராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கதறி அழுதபடியே திருவாரூர் எஸ்.பி. அலுவலகத்திற்குள் புகுந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ராகுலின் பெற்றோர் ”எமது மகளை விடுவிக்க , மகளிர் பொலிஸ் நிலைய உதவி ஆய்வாளர் மகாலட்சுமி 20,000 ரூபாய் லஞ்சம் கேட்ட தாகவும், ஆனால் தாம் 5,000 ரூபாயை மாத்திரமே கொடுத்ததாகவும், அப் பணத்தைப் பெற்றுக்கொண்டே விசாரணை என்ற பெயரில் அவர்கள் ராஜ்குமாரை அடித்து அவமானப்படுத்தியதாகவும், இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான தங்கள் மகன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் எமது மகனை தற்கொலைக்குத் தூண்டிய குறித்த மகளிர் பொலிஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டால் மாத்திரமே, ராகுலின் உடலை வாங்குவோம் எனவும் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
16 minute ago
29 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
3 hours ago