Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூலை 09 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீகார் மாநிலம் நவாடா பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன. பெண்ணின் கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
திருமணமான இந்த பெண்ணுக்கும் வேறு ஒரு நபருக்கும் ரகசிய காதல் உறவு இருந்து வந்துள்ளது. பெண்ணின் கள்ளக் காதலனுக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ரகசிய உறவு கணவருக்கும் தெரிந்ததாகவும் அதை அவர் கண்டித்தாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் அந்த பெண்ணுக்கும் காதலனுக்கும் உறவானது விடாமல் தொடர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் இந்த பெண் தனது கணவர் இல்லாத நேரம் பார்த்து காதலனை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அந்த நபரும் வீட்டிற்கு வந்த நிலையில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதை அக்கப்பக்கத்தில் இருந்த உற்றார் உறவினர்கள் பார்த்து இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். இருவரையும் அவர்கள் அடித்து உதைத்த நிலையில், தகவல் அறிந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு உடனே வந்துள்ளார். அப்போது தான் அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்தார்.
இனி நீ கள்ளத்தனமாக உறவுகொள்ள வேண்டாம் எனக் கூறி இருவருக்கும் தடாலடியாக திருமணம் செய்து வைத்தார். அருகே உள்ள சிவன் கோயிலில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர். இளம்பெண்ணின் நெற்றியில் காதலன் பொட்டு வைத்து மனைவியாக ஏற்றுக்கொண்டார்.
2 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago