Freelancer / 2025 மார்ச் 19 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
44 ஆண்டுகளுக்கு முன்னர், பட்டியலின மக்களை சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் தெஹுலி கிராமத்தில், 1981ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி அன்று, மாலை 4.30 மணியளவில் காக்கி உடையணிந்த 17 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் ஊருக்குள் புகுந்தனர். இவர்கள் அங்கிருந்த பட்டியலின மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில், 6 மாத சிசு மற்றும் 2 வயதுடைய இரு குழந்தைகள் உட்பட 24 பட்டியலின சமூகத்தினர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
நவம்பர் 19ஆம் திகதி, 1981இல் உள்ளூரைச் சேர்ந்த லயிக் சிங் என்பவரால் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை, கொள்ளை போன்ற வழக்குகளின் கீழ் குற்றவாளிகள் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 14 பேர் வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்திலேயே உயிரிழந்தனர். அப்போதே ஒருவர் தலைமறைவானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் விரிவான விசாரணையைத் தொடர்ந்து, கொள்ளைக் கும்பலின் தலைவர்கள் சந்தோஷ் மற்றும் ராதே உள்ளிட்ட கொள்ளையர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு மெயின்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 44 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
வழக்கின் வாதங்கள் அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த 12ஆம் திகதியன்று, குற்றம் சாட்டப்பட்டு இருந்த கப்டன் சிங் (வயது 60), ராம்பால் (60), ராம் சேவக் (70) ஆகிய 3 பேரையும் குற்றவாளிகள் என்று நீதிபதி இந்திரா சிங் தீர்ப்பளித்தார்.
குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட, மூவருக்கும் நீதிபதி மரண தண்டனை மற்றும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தார்
44 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago