2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பலாத்காரம் செய்யப்பட்ட 7 வயதுச் சிறுமி உயிரிழப்பு

Ilango Bharathy   / 2023 ஜனவரி 26 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திராவில் கடந்த 2021ஆம் ஆண்டு கால்வாயில் ஒரு சிறுமியின்சடலம் ,பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது 

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், குறித்த சிறுமியின் நெருங்கிய உறவினரான டி.சித்தையா  என்ற இளைஞர், சிறுமியைப் பலாத்காரம் செய்து  கொன்றமை தெரியவந்தது.

மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த குறித்த இளைஞர், சம்பவதினத்தன்று பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முற்பட்டதாகவும், இதன்போது சிறுமி கூச்சலிட்டதால், அவரது தலையில் அடித்துக்  கொலை செய்துள்ளார் எனவும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து சித்தையாவை கைது செய்த பொலிஸார், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சுமத்தப்பட்ட சித்தையாவுக்கு தூக்கு தண்டனை விதித்துத்  தீர்ப்பளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .