2025 ஜூலை 19, சனிக்கிழமை

பலிகொடுத்த ஆட்டின் கண்ணால் பலியான நபர்

Freelancer   / 2023 ஜூலை 06 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சத்தீஸ்கர் மாநிலம் சுராஜ்பூர் மாவட்டம் மதன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பகர் சாய் (வயது 50). இவர் தான் நினைத்தது நிறைவேறிவிட்டால் ஆட்டை பலி கொடுக்கிறேன் என்று தனது கடவுளிடம் வேண்டியுள்ளார்.

இதனிடையே, பகர் சாய் வேண்டுதல் நிறைவேறிய நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினருடன் மத வழிபாட்டு தலத்திற்கு சென்றுள்ளார். கடவுளுக்கு ஆட்டை பழிகொடுத்து வழிபாடு செய்துள்ளார்.

பின்னர், பலிகொடுக்கப்பட்ட ஆட்டை கிராமத்தினர் சமைத்துள்ளனர். சமைக்கப்பட்ட இறைச்சி கறியை கிராமத்தினர் மத வழிபாட்டு தலத்தில் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர்.

அப்போது, பகர் சாய் சமைக்கப்பட்ட தனது ஆட்டின் கண்ணை சாப்பிட்டுள்ளார். ஆட்டின் கண்ணை அவர் விழுங்கிய நிலையில் அது பகர் சாயின் தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதனால், அவரால் மூச்சு விட முடியவில்லை. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பகர் சாயை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X