2025 ஜூன் 14, சனிக்கிழமை

பழனிசாமி, ஸ்டாலின், கமல், தினகரன் வேட்புமனு தாக்கல்

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 15 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12 ஆம் திகதி  தொடங்கியது. முதல் நாளில் துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர்), பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி) உள்ளிட்ட 59 பேர் மனு தாக்கல் செய்தனர். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மனுத் தாக்கல் நடக்கவில்லை.

வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

இன்று (திங்கள்கிழமை) முகூர்த்த நாள் என்பதால் முக்கியதலைவர்கள் உட்பட அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் முதல்வர் பழனிசாமி, எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.  

சென்னை கொளத்தூர் தொகுதியில் 3ஆவது முறையாக போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.  

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் கோவை பேங்க் சாலையில் உள்ள மாநகராட்சி உதவி ஆணையர் (மத்திய மண்டலம்) அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்ய இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இன்று பகல் 1.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .