Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 17 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மொத்தம் 3 அடுக்குகளாக ராமர் கோவில் கட்டப்படுகிறது. நாகரா கட்டக்கலை நுட்பத்துடன் சிற்பங்கள் கொண்ட தூண்கள் அமைத்து கோவில் கட்டப்பட்டு வருகிறது.
தற்போது கோவிலில் முதற்கட்ட கட்டுமான பணிகள் முடிவைடைந்துள்ளன. இதையடுத்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் திகதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர். கோவில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் புதன்கிழமை (17) முதல் தொடங்கி உள்ளன.
இந்நிலையில் தான் ஜனவரி 22ம் திகதி நடக்கும் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதையடுத்து அவர் 11 நாள் விரதத்தை தொடங்கி உள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கம் மற்றும் ஆடியோ மெசேஜில் கூறியிருந்தார். அதில் “அயோத்தி ராமர் கோயில் திறப்பு நாளான ஜன. 22-ம் திகதியை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதற்கு இன்னும் 11 நாட்களே உள்ளன. வாழ்வில் முதல் முறையாக தனித்துவமான உணர்வு, தெய்வீக அனுபவத்தை உணர்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது பல தலைமுறை கனவு. அதை நிறைவேற்றுவதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி, கடவுளை வழிபடுவதற்கு நமக்குள் தெய்வீக உணர்வைஎழுப்ப வேண்டும். ராமர் சிலை பிரதிஷ்டைக்கு முன்பு பின்பற்ற வேண்டிய உறுதிமொழிகள், விதிகளை வேதங்கள் எடுத்துரைக்கின்றன. இதன்படி 11 நாட்கள் விரதத்தை தொடங்குகிறேன்” என தெரிவித்திருந்தார். அதன்படி பிரதமர் மோடி விரதத்தை கடைப்பிடித்து வருகிறார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடி வரும் நாட்களில் இன்னும் தனது விரதத்தை தீவிரமாக்க உள்ளார். அதாவது கும்பாபிஷேகத்துக்கு 3 நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி சொகுசு படுக்கையில் தூங்காமல் இருப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மாறாக அவர் மரக்கட்டிலில் போர்வை விரித்து தூங்க உள்ளார்.
அதுமட்டுமின்றி அந்த 3 நாட்களும் பிரதமர் மோடி பழங்களை மட்டுமே உணவாக எடுத்து கொள்ள உள்ளார். இந்த நாட்களில் அவர் சில மந்திரங்களையும் உச்சரிக்க உள்ளார். மேலும் கோவிலுக்காக தியாகம் செய்தவர்களின் அடையாளமாக அமைக்கப்பட்டுள்ள ஜடாயு சிலையை பிரதமர் மோடி வணங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
5 hours ago
5 hours ago