Ilango Bharathy / 2022 ஜனவரி 06 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் டியோகர் மாவட்டத்தில் உள்ள ஜஸ்தீ எனுமிடத்தில், பஸ்ஸொன்றுடன், சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வந்த கனரக வாகனமொன்று நேருக்கு நேர் மேதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (5) இடம்பெற்ற இவ்விபத்தில் 26 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து இடம்பெற்ற பகுதியில் காணப்பட்ட பனிமூட்டம் காரணமாக எதிரே வந்த வாகனங்கள் தெரியாமல் இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago