2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பஸ் தரிப்பிடத்தை ஆக்கிரமித்த மூதாட்டி

Freelancer   / 2023 ஜூன் 13 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி பகுதியில் பயணிகள் பஸ் தரிப்பிடம்  உள்ளது. இந்த தரிப்பிடத்தில் இருந்து பஸ் பயணிகள் மதுரை ராமேஸ்வரம் விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வது வழக்கம். 

இந்த பஸ் தரிப்பிடத்தை மூதாட்டி ஒருவர் தனது வீடு போல் ஆக்கிரமித்து பயன் படுத்தி வருகிறார்.

அவர் இந்த ஸ் தரிப்பிடத்தை பஸ் பயணிகள் யாரும் அமர விடாமலும் அவதூறாக பேசியும் வருவதாக கூறப்படுகிறது.

 மேலும் அந்த மூதாட்டி நரிக் குடியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து  மதுபான போத்தல்கள்  தண்ணீர் போத்தல்கள் போன்றவற்றை பஸ் நிலையம் அருகிலேயே மலை போல் குவித்து வைத்திருப்பதால் அதிலிருந்து வரும் துர்நாற்றங்களால் நோய் தொற்றுகள் ஏற்படுவதுடன் பயணிகளும் முகம் சுழித்து வருகின்றமை குறிப்பிடதக்கது..


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X