2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தானால் வீசப்பட்ட போதைப்பொருள் மீட்பு

Editorial   / 2023 ஜூன் 07 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் மூலம் கைவிடப்பட்ட 5 போதைப்பொருள் பக்கெட்டுகள் அமிர்தசரஸில் மீட்கப்பட்டன.

அமிர்தசரஸின் புறநகர்ப் பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள் மூலம் ஒரு பெரிய பொதியில் ஹெரோய்ன் போதைப்பொருள், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மற்றும் பஞ்சாப் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையின் போது சனிக்கிழமையன்று மீட்கப்பட்டது.

அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ராய் கிராமத்தின் புறநகர்ப் பகுதியில், சனிக்கிழமை அதிகாலையில், பாதுகாப்புப் படை மற்றும் பஞ்சாப் காவல்துறையின் கூட்டு நடவடிக்கைகளுக்காக பதுங்கியிருந்தனர். இதன்போது ட்ரோன்கள் மற்றும் சரக்குகளை வீசும் சத்தம் கேட்டதாக   ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புக் குழு அந்தப் பகுதியைத் தேடத் தொடங்கியது, பின்னர் துருப்புக்கள் ஒரு விவசாய வயலில் இருந்து சந்தேகத்திற்கிடமான ஐந்து போதைப்பொருள் பாக்கெட்டுகளை மீட்டனர். இந்த சரக்குகளுடன் இணைக்கப்பட்ட இரும்பு வளையமும் கண்டுபிடிக்கப்பட்டது

  அதிகாரிகளின் கூற்றுப்படி, மீட்கப்பட்ட போதைப்பொருளின் (ஹெரோய்ன்) மொத்த எடை சுமார் 5.5 கிலோ கிராமாகும் "பிஎஸ்எஃப் மற்றும் பஞ்சாப் காவல்துறையினரின் கூட்டு முயற்சிகள் மற்றும் சரியான நேரத்தில் நடவடிக்கை காரணமாக கடத்தல் பொருட்களை கடத்துவதற்கான பாகிஸ்தானின் மற்றொரு மோசமான முயற்சி முறியடிக்கப்பட்டது" என்று பிஎஸ்எஃப் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X