2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு ’டீ’

Editorial   / 2021 ஒக்டோபர் 01 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜம்மு காஷ்மீர் யுரி செக்டாரில் இந்திய ராணுவம் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் 19 வயது பாகிஸ்தான் பயங்கரவாதி சிக்கினார். விசாரணையில் இந்தியாவுக்கு வந்து ஆயுதங்களை சப்ளை செய்வதற்காக ரூ.20,000 கொடுத்தனர் என்று ஒப்புக் கொண்டார்.

இது தொடர்பான வீடியோவில் இந்த 19 வயது டெரரிஸ்ட் பாகிஸ்தான் ஆட்களிடம் தன்னை தன் தாயிடம் சேர்ப்பிக்குமாறு கெஞ்சுகிறார். மீடியா சந்திப்பில் இந்த பயங்கரவாதி முன்னால் இரண்டு மைக்குகள் மற்றும் ஒரு பெரிய டம்ளரில் டீ இருந்தது கண்டு ட்விட்டர்வாசிகள் தங்கள் கருத்துகளை நகைச்சுவையாகவும் விமர்சன ரீதியாகவும் பகிர்ந்து வருகின்றனர்.

டீ எப்படிப்பா இருக்கு? என்று பாகிஸ்தான் பயங்கரவாதத்தையும் ஆர்மியையும் கேலி செய்து நெட்டிசன்கள் ட்விட்டரை தெறிக்க விட்டுள்லனர். இதன் பின்னணியில் உள்ள கதை என்னவெனில் பிப்ரவரி 2019-ல் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் படையினரால் பிடிக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதாவது பாலகோட் தாக்குதலுக்கு ஒரு நாளுக்குப் பிறகு இது நடந்தது.

அப்போது பாகிஸ்தானி ட்விட்டர் ஹேண்டிலில் ‘டீ பிரமாதம்’ என்ற கருத்துக்கள் பதிவாகி வைரலாகின. அபினந்தனுக்கு அளித்த டீ எப்படி என்ற ரீதியில் பாகிஸ்தான் டிவிட்டர்வாசிகள் அப்போது பதிவிட்டனர். இப்போது டெரரிஸ்டுக்கு அருகில் டீ இருப்பதையடுத்து நம் ட்விட்டர்வாசிகள் டீ எப்படி இருக்கு?, பிரமாதமான டீ, பாகிஸ்தானி பயங்கரவாதிக்கு டீ அளித்த இந்திய ராணுவம் என்று கருத்திட்டு வருகின்றனர்.

அதில் ஒரு கருத்து மிக நகைச்சுவையாக அமைந்தது, “நீ எல்லை தாண்டி வந்ததற்குக் காரணம் இந்த டீயை ருசிக்கத்தான்” என்று சொல்ல மாட்டாயே” என்ற பதிவு அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. சில டிவிட்டர்களை இங்கே காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .