2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பாதுகாவலர் துன்புறுத்தல்: 17 கி.மீ. நடந்து சென்று புகார் அளித்த மாணவிகள்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 19 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

60 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகள், நள்ளிரவு வேளை 17 கீலோமீற்றர் நடந்து சென்று தமது விடுதி காப்பாளர் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், குந்த்பானி பகுதியில் இயங்கிவரும் பாடசாலை விடுதியைச் சேர்ந்த மாணவிகளே விடுதியை விட்டு ரகசியமாக வெளியேறி  இவ்வாறு புகார் அளித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ” விடுதி பாதுகாவலர் தம்மைத்  துன்புறுத்துவதாகவும் ,உண்ணுவதற்கு பழைய உணவுகளை வழங்குவதாகவும், கழிவறைகளை தூய்மை செய்யக் கட்டாயப்படுத்துவதாகவும், கடும் குளிரிலும்  வெறும் பாய் மாத்திரமே உறங்குவதற்குத் தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவிகளைக்  கடுமையாகத் தாக்கியதாகவும், இனால் குறித்த விடுதியை விட்டு ரகசியமாக வெளியேறி பொலிஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாணவிகளின் புகாரின் அடிப்படையில் குறித்த விடுதியின் பாதுகாவலருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .