2025 ஜூலை 19, சனிக்கிழமை

பாலியல் உறவை தவிர்ப்பது கொடுமைப் படுத்தும் செயல்

Freelancer   / 2023 ஜூலை 02 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணமான தம்பதியில் ஒருவர் மற்றொருவருடன் வேண்டுமென்றே பாலியல் உறவை தவிர்ப்பது மனரீதியான கொடுமை படுத்தும் செயல் என புது டெல்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

2014இல் திருமணமான ஜோடி ஒன்றின் விவாகரத்து வழக்கு புதுடெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த புதுடெல்லி குடும்ப நல நீதிபதி விபின் குமார் ராய் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார். விசாரணையில் அந்த பெண் மெட்ரி மோனிதளத்தின் மூலமாக பார்த்து பிடித்து போய் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், திருமணமானதில் இருந்த அந்த பெண் கணவருடன் பாலியல் உறவு மேற்கொள்வதை தொடர்ந்து தவிர்த்து வந்தார். திருமணத்திற்கு முன்பே இவர்கள்  13 மாதங்கள் பேசி பழகி அறிமுகமானவர்கள்.

இப்படியே பல மாதங்கள் கழிந்த நிலையில், ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த கணவர் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். கணவர் தரப்பு எதிராக வாதாடிய பெண்ணின் தரப்பினர், உடலுறவு என்றாலே அச்சத்திற்கு ஆளாகும் ஜீனோபோபியா நோய் அந்த பெண்ணுக்கு இருப்பதாக வாதாடினர்.

வாதங்களை கேட்ட நீதிபதி விபின் குமார் ராய் தனது தீர்ப்பில்,  “இயல்பான ஆரோக்கியமான பாலியல் உறவு என்பது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் அடிப்படை அங்கமாகும். வேண்டு மென்றே தனது இணையுடன் பாலியல் உறவை தவிர்ப்பது என்பது மற்றொரு நபரை மன ரீதியான கொடுமைக்கு ஆளாக்கும் செயல். குறிப்பாக இருவரும் இளம் ஜோடியாக இருக்கின்றீர்கள்.

சுயமாக தனது கணவரை தேர்வு செய்து திருமணத்திற்கு முன்பு பேசி அறிமுகமான பின்னர் குடும்ப வாழ்க்கையில் பாலியல் உறவை தவிர்பதை ஏற்க முடியாது”  என்ற நீதிபதி, கணவரின் கோரிக்கையை ஏற்று விவாகரத்து கொடுத்து தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X