2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பாலியல் குற்றச்சாட்டு; பதவியை இராஜினாமா செய்த அமைச்சர்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 03 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சர் ‘சந்தீப் சிங் ‘தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்திய ஹொக்கி அணியின் தலைவராக செயற்பட்டு, பின்னர் அரசியலுக்குள் நுழைந்த சந்தீப்சிங் மீது  அண்மையில் தடகள பெண் பயிற்சியாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

 இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு கூறி, சிறப்பு விசாரணைக் குழுவொன்றை அமைத்து ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்,  உத்தரவிட்டார்.

இந்நிலையில் தன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால்  சந்தீப் சிங் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

அதே சமயம் தனது நற்பெயரைக்  களங்கப்படுத்துவதற்காகவே இப்புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தீப்சிங் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .