2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பாலியல் தொந்தரவு;மின் கம்பத்தில் கட்டிவைத்து அடித்த தந்தை

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 கர்நாடக மாநிலம் மங்களூருவில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை, அச்சிறுமியின் தந்தை மின் கம்பத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ தினத்தன்று குறித்த சிறுமி வீதியில் தனியாகச்  சென்றுகொண்டிருந்த போது, 25 வயதான குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து அச்சிறுமி தனது தந்தையிடம் தெரியப்படுத்தியதையடுத்து, ஆத்திரமைடைந்த தந்தை, தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, குறித்த இளைஞரை மின் கம்பம் ஒன்றில்  கட்டிவைத்து அடித்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் , குறித்த இளைஞரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .