2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பிரதமர் வீட்டின் மேல் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு

Editorial   / 2023 ஜூலை 03 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன்  பறந்தது. பாதுகாப்பு படையினர் புதுடெல்லி காவல்துறையை அதிகாலை 5.30 மணிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

பிரதமரின் வீட்டின் மேல் ட்ரோன் பறந்தது தொடர்பாக புதுடெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுடெல்லி பொலிஸா ட்ரோனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை ட்ரோன் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியில் அதிகாலையில் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X