2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பிரபல யூடியூப் சேனல்கள் மீது சரத்குமார் புகார்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 01 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 “இரண்டு பிரபல யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி” நடிகரும்,சமத்துவ மக்கள் கட்சியின்  தலைவருமான  சரத்குமார், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

குறித்த புகாரில்” சில தினங்களாக இரண்டு யூடியூப் சேனல்களில், என்னைப் பற்றியும், எனது குடும்பத்தினரைப் பற்றியும், கலைத் துறையினரைப் பற்றியும் தவறாக சித்தரித்து, இழிவுபடுத்தும் வகையில் வீடியோக்கள்  வெளியிடப்பட்டு வருகின்றன.

 உண்மைக்கு புறம்பான  செய்திகளே, தவறான நோக்கத்தில் தொடர்ந்து இவ்வாறு பதிவிடப்பட்டு  வருகின்றன. 

எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும்,  தனிப்பட்ட முறையில் தேவையற்ற மன உளைச்சலுக்கு எம்மை  ஆளாக்கும், இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்ட நபர் யாராக இருந்தாலும் கண்டறிந்து அவர்கள் மீது  தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .