A.K.M. Ramzy / 2021 மார்ச் 08 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி:
கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கான இடைத் தேர்தலில், பிரியங்கா போட்டியிட வேண்டும் என, விருப்ப மனு அளித்து உள்ளார், சிவகங்கை எம்.பி., கார்த்தி.
இந்த விவகாரம், டில்லி காங்கிரஸ் வட்டாரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு உத்தர பிரதேசத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், பிரியங்கா கவனம் செலுத்தி வருகிறார்; அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். இந்நிலையில், தேவையில்லாமல், கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிடும்படி, அவருக்காக, கார்த்தி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளது, பிரியங்கா உள்ளிட்ட, காங்கிரஸ் மேலிட தலைவர்களிடையே, எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திக்கும், அவரது தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரத்துக்கும், கட்சியில் தற்போது பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. இழந்த செல்வாக்கை மீட்பதற்காக, இது போன்ற வேலைகளில் கார்த்தி ஈடுபடுவதாக, கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago