2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பிரியாணி மாணவியின் மரணத்தில் புதிய திருப்பம்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 11 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கேரளாவில் பிரியாணி உட்கொண்ட யுவதியொருவர் உயிரிழந்த விவகாரத்தில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ‘அஞ்சு ஸ்ரீ பார்வதி‘. கல்லூரி மாணவியான இவர் கடந்த 31 ஆம் திகதி ஒன்லைன் வாயிலாக பிரியாணியொன்றை ஓர்டர் செய்து குடும்பத்துடன் உட்கொண்டுள்ளார்.

இந்நிலையில் பார்வதியுடன் உணவருந்திய  4 பேரும் நலமுடன் இருந்துள்ள நிலையில், பார்வதிக்கு மாத்திரம் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

 இதனையடுத்து அவர் உடனடியான வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத்  தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் கடந்த 8 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து தரமற்ற பிரியாணியை  உட்கொண்டமையினாலேயே  அஞ்சுஸ்ரீ உயிரிழந்ததாக அவரது பெற்றோர்  பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த  உணவகத்திற்குச்  சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், இரத்தத்தில் விஷம் கலந்ததால் உடல் உறுப்புகள் செயலிழந்து அஞ்சு ஸ்ரீ உயிரிழந்துள்ளார் எனப்   பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், ‘அஞ்சுஸ்ரீ, 2 ஆண்டுகளுக்கு மேலாக ஒருவரைக் காதலித்து வந்துள்ளார் எனவும், அந்நபர் புற்றுநோய் பாதிப்பால் ஒரு மாதத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ளார் எனவும், அதனால் ஏற்பட்ட மன வருத்தத்தினாலேயே அஞ்சுஸ்ரீ  எலி  மருந்தை உட்கொண்டுள்ளார் எனவும்  தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .