2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பிறந்தநாளில் காதலனின் உயிரைப் பறித்த சிறுமி

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 17 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறுமியொருவர் பிறந்தநாள் அன்று தன்னைச்  சந்திக்க வந்த காதலனுக்கு, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலைசெய்த சம்பவம் சென்னையில் இடம்பெற்றுள்ளது.

பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  சஞ்சீவ் குமார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 16 வயதான சிறுமியொருவரைக் காதலித்து வந்தார்.

திருப்பூரில் பணியாற்றிய சஞ்சீவ் குமார், தனது பிறந்தநாளைக் காதலியுடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக, சென்னைக்கு வந்துள்ளார்.

பின்னர் சென்னை வந்த அவர், காதலியுடன் ஊர் சுற்றிவிட்டு, ஊர் திரும்புவதற்காக கோயம்பேடு சென்றுள்ளார். அப்போது, காதலி விஷம் கலந்த குளிர்பானத்தை, சஞ்சீவ் குமாருக்கு கொடுத்துள்ளதாகக்  கூறப்படுகிறது.

இதனை அறிந்த சஞ்சீவ்குமார், உறவினர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன், காதலி குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்துவிட்டதாகக் கூறி, சஞ்சீவ்குமார் மரண வாக்குமூலம் கொடுத்ததால், இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பிரேத பரிசோதனைக்குப் பிறகு, சஞ்சீவ்குமாரின் உடல் சொந்த ஊரான பரமக்குடியில் உள்ள மஞ்சூர் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .