Freelancer / 2025 மே 20 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அசாமின் சரைதியோ மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரை, கடந்த 2012ஆம் ஆண்டு சித்ரவதை செய்து எரித்துக்கொன்ற 23 பேருக்கு ஆயுள் தண்டை விதிக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு எதிராக அவர் சூனியம் செய்வதாக சந்தேகப்பட்டு இந்த கொடூரத்தை இந்தக் கும்பல் நிகழ்த்தியுள்ளது.
இந்த செயலை செய்த 11 பெண்கள் உட்பட 23 பேர் கொண்ட அந்த கும்பலை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. 13 ஆண்டுகளாக நடந்த விசாரணை முடித்து, திங்கட்கிழமை (19) தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதில் 23 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபாரதமும் விதித்து நீதிபதி அபுபக்கர் சித்திக்கு தீர்ப்பு அளித்தார்.
மேலும் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.8 இலட்சம் இழப்பீடு வழங்கவும் குற்றவாளிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago