Mithuna / 2024 ஜனவரி 16 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் பகுதியில் உள்ள ஆங்ரேஸ் சிங் என்ற நபர், சுகாதாரப் பணியாளர்களுக்கான அரசாங்க தேர்வின் போது தனது காதலி போல் வேடம் போட்டு போலியாக நடிக்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

அதிகாரிகளின் அறிக்கைகளின்படி, "ஆங்ரேஸ் சிங் பெண் வேடத்தில் ஜனவரி 7 ஆம் திகதி கோட்காபுராவின் டிஏவி பொது பாடசாலையில் தேர்வு எழுத வந்துள்ளார். அதற்காக, மேக்கப், பொட்டு மற்றும் சல்வார் கமீஸ் அணிந்து போலி வாக்காளர் மற்றும் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி தேர்வு எழுத வந்தார்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆவணங்கள் இருந்தபோதிலும், பயோமெட்ரிக் கருவியில் பதிந்த அவரது கைரேகைகள் உண்மையான வேட்பாளரின் கைரேகைகளுடன் பொருந்தாததால் சிங்கின் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், அவர் தனது காதலி பரம்ஜித் கவுர் என்ற பெண்ணுக்காக போலி ஆவணங்களை பயன்படுத்தி தன்னை பெண்ணாக சித்தரித்து தேர்வு எழுத வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, நிர்வாகம் பரம்ஜித் கவுர் விண்ணப்பத்தை நிராகரித்தது, மேலும் சிங் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
5 minute ago
44 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
44 minute ago
56 minute ago
1 hours ago