Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Freelancer / 2024 மே 26 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரபிரதேசத்தில் நின்றிருந்த பேருந்தின் மீது டிப்பர் லொரி மோதிய விபத்தில் 11 சுற்றுலா பயணிகள் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் குதர் பகுதிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை தாபா ஓட்டல் பகுதியில், சாலையோரமாக சுற்றுலா பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது. நேற்றிரவு 11 மணியளவில் நின்றிருந்த பேருந்தின் மீது ‘பாலாஸ்ட்’ கற்கள் ஏற்றிவந்த லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளனது. அப்போது பேருந்துக்குள் இருந்த சுற்றுலா பயணிகள், 11 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 10 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து ஷாஜஹான்பூர் பொலிஸ் எஸ்பி அசோக் குமார் மீனா கூறுகையில், ‘நேற்று இரவு 11 மணியளவில், குதார் பகுதியில் செயல்பட்டு வரும் தாபா அருகே சுற்றுலா பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது. பேருந்தில் இருந்த சுற்றுலா பயணிகள், உத்தரகாண்ட் மாநிலம் பூர்ணகிரி செல்ல சில மணி நேரம் ஓய்வெடுத்தனர். அவர்கள் அனைவரும் பேருந்துக்குள் அமர்ந்து இருந்தனர். சிலர் மட்டும் தாபாவில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லொரி ஒன்று நின்றிருந்த பேருந்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 11 சுற்றுலா பயணிகள் இறந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பேருந்தில் பயணம் செய்த பக்தர்கள் அனைவரும், உத்தரபிரதேச மாநிலம சீதாபூர் மாவட்டம் கமலாபூர் அடுத்த ஜெதா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
3 hours ago