2025 ஜூலை 19, சனிக்கிழமை

பொறியாளர் தலைமறைவு

Freelancer   / 2023 ஜூன் 20 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒடிசா ரயில் விபத்து தொடர்பான சிபிஐயின் விசாரணை வளையத்தில் இருந்த ரயில்வே பொறியாளர் தலைமறைவானதால், அவரின் வீட்டுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதிக் கொண்டதில் 290-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த கோர விபத்து தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.

விபத்து நடந்தபோது பணியில் இருந்த சிலரை சிபிஐ தங்களின் வளையத்துக்குள் கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிபிஐயின் விசாரணை வளையத்தில் இருந்த சிக்னல் பிரிவு இளநிலை பொறியாளர், பாலசோரில் அவர் குடியிருந்த வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X