2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மகன் இறந்ததால் மருமகளை மனைவியாக்கிய முதியவர்

Freelancer   / 2023 ஜனவரி 30 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள கோரக்பூர் என்ற மாவட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

சாபியா உம்ராவ் கிராமத்தைச் சேர்ந்த 70 வயதானவருக்கு  திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். அவருடைய மனைவி இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து இவரது மூன்றாவது மகனும் சில ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில் இவர் தனது 28 வயதான மருமகளை   சமீபத்தில் கோவிலில் வைத்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும்,  தனது புதிய உறவில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் முதியவர் கூறியுள்ளார்.
    
இந்த திருமணம் குறித்து அப்பகுதி முழுவதும் பேச்சு பொருளாக மாறி வருகிறது. கணவர் இறந்த பிறகு அப்பெண் தனிமையில் இருந்தாக சிலர் கூறுகின்றனர். அதனால் மாமனாரை மணக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

சிலரது கருத்து இவர்களது திருமணத்துக்கு ஆதரவாக இருந்தாலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .