2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மகளுக்கு போட்டியான மாணவனை விஷம் வைத்து கொன்ற தாய்

Editorial   / 2022 செப்டெம்பர் 06 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எட்டாம் வகுப்பில் படிக்கும் தனது மகளைவிட சக மாணவன் நன்றாக படிக்கிறான் என்பதற்காக விஷம் கொடுத்து மாணவனை கொலை செய்த சம்பவம் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவன், வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளியின் ஆண்டு விழா என்பதால் அரைநாள் மட்டுமே பள்ளி செயல்பட்டுள்ளது. எனவே பிற்பகல் வீட்டிற்கு வந்த மாணவனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவனை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதாவது காவலாளியிடம் ஒரு பெண்மணி வந்து குளிபானத்தை கொடுத்து அதை மாணவனிடம் கொடுக்க சொல்லியதாக கூறியுள்ளார். இதை கேட்ட காவலாளியும், அதை மாணவனுக்கு கொடுத்துள்ளார். இதனை அருந்திய மாணவனுக்கு உடல் நகலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவன்   சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காவலாளி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மாணவியின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X