2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மகளை காக்க, ஆணுறுப்பைத் அறுத்த பெண்

Editorial   / 2022 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரின் ஆணுறுப்பைத் துண்டித்த பெண்ணை பொலிஸார் கைதுசெய்தனர்.

திருமணம் தாண்டிய உறவுகள் அதிகமான நேரங்களில் விபரீதமாகவே முடிவதுண்டு. அது கொலையாகவோ அல்லது வேறு நினைத்துப் பார்க்க முடியாத சம்பவமாகவோ இருக்கலாம்.

உத்தரப்பிரதேசத்தில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்புர் கெரி மாவட்டத்திலுள்ள கிராமத்தில் வசிக்கும் 36 வயதான பெண், விவசாயக் கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவந்தார். இவர் கணவர்  பிரிந்துவிட்டார். இதனால்  தன் 14 வயது மகளுடன் தனியாக அப்பெண் வசித்துவந்தார்.

இந்த நிலையில்,  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 32 வயது நபர் ஒருவருடன் அப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்தத் தொடர்பு நாளடைவில் காதலாக மாறியது.

கணவர் இல்லாத காரணத்தால் அப்பெ, தன்னுடன் பழகிய நபரைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு திருமணம் செய்யாமல் வாழ்ந்துவந்தார்.

பகல் நேரத்தில் அப்பெண் விவசாய வேலைக்குச் சென்றுவிடுவார். அந்த நேரத்தில் அந்தப் பெண்ணின் மகள் வீட்டில் தனியாக இருப்பது வழக்கம். சம்பவத்தன்று அப்பெண் தோட்ட வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார்.

வீட்டுக்குள் நுழையும்போது அப்பெண்ணின் மகளை அவருடன் சேர்ந்து வாழ்ந்தவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுகொண்டிருந்தார்.

அதைத் தடுக்க அப்பெண் முயன்றார். அவர் முயற்சி பலனலிக்கவில்லை. இதனால் பாலியல் வன்கொடுமையைத் தடுக்க வீட்டின் சமையல் அறையிலிருந்த கத்தியை எடுத்துவந்து தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தவரின் மர்ம உறுப்பை வெட்டி எடுத்துவிட்டார்.

இதனால் அந்த நபர் உதவி கேட்டுச் சத்தம் போட்டார். அக்கம் பக்கமுள்ளவர்கள் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். பொலிஸார் விரைந்து வந்து அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து இந்த வழக்கை விசாரிக்கும் லக்கிம்பூர் பொலிஸ்  அதிகாரி, “சம்பந்தப்பட்ட நபர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவர்மீது பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

காதலனுக்கு எதிர்காலம் இல்லாமல் செய்த பெண், பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “என் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, அதைத் தடுக்க முயன்றேன். என்னையும் தாக்கினார். எனவே, வேறு வழியில்லாமல் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஆணுப்பை அறுத்துவிட்டேன். இதற்காக நான் வருத்தப்படவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X