A.K.M. Ramzy / 2021 மார்ச் 10 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுச்சேரி,
புதுவையில், பஸ் வசதி சரியில்லை மற்றும் பல்வேறு குறைகள் குறித்து ஆளுனர் மாளிகைக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளன. இதுதொடர்பாக ஆய்வு செய்ய ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் பஸ்ஸில் பயணிக்க முடிவு செய்தார்.
ஆளுனர் மாளிகையிலிரு ந்து காரில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை பகுதிக்கு வந்து, பாகூர் செல்லும் தனியார் பஸ்ஸில் ஏறி முன் இருக்கையில் அமர்ந்தார்.
ஆளுனருடன் அவரது ஆலோசகர் ஏ.பி.மகேஸ்வரி, சிறப்பு செயலாளர் சுந்தரேசன் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர். பஸ்ஸில் அமர்ந்து கொண்டே அவர் சாலைகளின் நிலை குறித்து ஆய்வு செய்தார்.
அதுமட்டுமின்றி பயணம் செய்த பயணிகளிடம் குறைகள் பற்றிக் கேட்டார். சிலர் அபிசேகப்பாக்கம் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை சரியில்லை என்று தெரிவித்தனர்.
தவளக்குப்பம் வந்ததும் பஸ்ஸை விட்டு இறங்கிய தமிழிசை சவுந்தரராஜன் மற்றொரு பஸ்ஸில் ஏறி அபிசேகப்பாக்கம் சென்றார். அங்கிருந்து கார் மூலம் சுடுகாட்டுப்பாதையில் சென்று பார்த்தார். அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தன.
அதன்பின் அபிசேகப்பாக்கம் வந்து அங்கிருந்து மீண்டும் தனியார் பஸ் மூலம் மரப்பாலம் சந்திப்புக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் ஏறி ஆளுனர் மாளிகைக்குச் சென்றார்.
16 minute ago
29 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
3 hours ago