2025 ஜனவரி 25, சனிக்கிழமை

மசூதி விழாவில் மிரண்ட யானை: ஒருவர் மீது தாக்குதல்

Freelancer   / 2025 ஜனவரி 09 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தின் திரூர் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் நடைபெற்ற விழாவில், யானை ஒன்று மிரண்டு ஒருவரை தாக்கியுள்ளது.

மேலும், இச்சம்பவத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் காயமடைந்தனர்.

குறித்த மசூதியில், “புதியங்காடி” என்ற விழா, புதன்கிழமை (8) நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த விழாவுக்கு 5 அலங்கரிக்கப்பட்ட யானைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. 

திருவிழாவில் பங்கேற்ற மக்கள் யானையை தங்கள் அலைபேசியில படம் பிடிக்க முயன்றனர். இதில் ஸ்ரீ குட்டன் என்ற ஒரு யானை மிரண்டு கூட்டத்தினரை தாக்கத் தொடங்கியது. இதில், ஒருவரை யானை துதிக்கையால் தூக்கி வீசி எறிந்தது. இதில் அவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கோட்டக்கல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

யானை மிரண்டதை பார்த்து திருவிழாவில் பங்கேற்றவர்கள் பீதியில் அந்த இடத்தை விட்டு தப்பியோட முயன்றனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, மிரண்ட யானையை பாகன்கள் சிலர் சங்கிலியால் கட்டி இழுத்து கட்டுப்படுத்தினர். யானையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சுமார் 2 மணித்தியாலங்கள் ஆனமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X