2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மதுபானத்தில் சயனைட்

Ilango Bharathy   / 2023 மே 22 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மதுபானசாலையொன்றில் விற்பனைசெய்யப்பட்ட மதுவில் ‘சயனைட்‘ கலக்கப்பட்டிருந்த சம்பவம் தஞ்சாவூரில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மதுபானசாலையில் விற்பனை செய்யப்பட்ட மதுவைப் பருகிய இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர்களது உடலில்  சயனைட் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த மதுபான சாலையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மதுபானசாலைக்கு சீல் வைத்த பொலிஸார்  இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .