A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 01 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நந்திகிராம்:
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும், நந்திகிராம் தொகுதியில், 144 தடையுத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. நந்திகிராமில் மம்தாவை எதிர்த்து, பா.ஜ., சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த சுவேந்து அதிகாரி, கடந்த பெப்ரவரியில், பா.ஜ.,வில் இணைந்தார். நந்திகிராமில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மம்தா உள்ளார்.
ஆனால், மேற்கு வங்கத்தில் இம்முறை ஆட்சி அமைப்பதுடன், நந்திகிராமில் மம்தாவை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில், பா.ஜ., உள்ளது. இதனால், இத்தொகுதியில் பரபரப்பும், பதற்றமும் அதிகரித்துள்ளது.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago