Editorial / 2022 டிசெம்பர் 28 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் நரேந்திர மோடியின் தயார் ஹீராபென், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனைக்கு விரைந்து வந்து தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தயார் ஹீராபென் கடந்த ஜூன் மாதம் தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சமீபத்தில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச் சாவடிக்கே வந்து அவர் வாக்களித்தார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அகமதாபாத் வந்த பிரதமர் நரேந்திர மோடி, தாயார் ஹீராபென்னை சந்தித்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயார் ஹீராபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனைக்கு வந்து தாயாரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அவரிடம், ஹீராபென்னின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் விளக்கிக் கூறினர்.
41 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago