2025 ஜூலை 19, சனிக்கிழமை

மறுமணத்துக்காக மகள் கொத்திக் கொலை

Freelancer   / 2023 ஜூன் 11 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைக்கு அ​டிமையாகியிருந்த ஒரு பெண் குழந்தையின் தந்தை, மறுமணம் செய்துக்கொள்வதற்கு யாரும் பெண் கொடுக்கமையால், தன்னுடைய மகளை கோடரியால் கொத்தி​ படுகொலைச் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், மாவேலிக்கரையை அடுத்த புன்ன மூடு பகுதியிலேயே இச்சம்பவம் ​இடம்பெற்றுள்ளது.

 3 ஆண்டுகளுக்கு முன்னர் தன் மனைவி தன்னுயிரை மாய்த்துக்கொண்டதன் பின்னர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பி தன்னுடைய மகளுடன் வசித்து வந்தார்.    

இந்நிலையில், தன்னுடைய மகளை கோடரியால் வெட்டிக்காயப்படுத்திவிட்டு தப்பிக்க முயன்றார். எனினும், மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைந்தனர்.

 மனைவி இறந்த நிலையில், மறு திருமணம் செய்ய அவர்,  பெண் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால்  பெண் குழந்தை இருந்ததால், பலரும்  பெண் கொடுக்க முன் வரவில்லை. இதனால் மகளை  அவர் கொன்று இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.  அத்துடன்   கடந்த 4 ஆண்டுகளாக போதைக்கு அடிமையாகி இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X