A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளை நிற காக்கையை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
ஆம்பூர் அடுத்த மிட்டாளம் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக வெள்ளை நிறம் கொண்ட காக்கை ஒன்று இரை தேடி அங்கும், இங்கும் பறந்து கொண்டிருக்கிறது.
மிட்டாளம் குடியிருப்புப் பகுதிகளில் பறந்து திரியும் இந்த அபூர்வ வகையான காக்கையை அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் பெரிய வர்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்கின்றனர். சிலர் பழம், தானிய வகைகளை உணவாக வைத்து வெள்ளை நிற காக்கையை தங்கள் வீட்டின் அருகே வரவைக்க முயற்சி செய்தனர்.
ஆனால், வீட்டின் மேல் மாடியில் நின்றபடி இரையை தேடும் வெள்ளை நிற காக்கை அங்கும், இங்கும் பறந்தபடி கடந்த 2 நாட்களாக வட்டமடித்து வருகிறது. இதுவரை கருப்பு நிறத்திலேயே காக்கை பார்த்த சிறுவர்களுக்கு வெள்ளை நிறம் கொண்ட காக்கை அழகாக இருப்பதாக கூறி வெள்ளை காக்கை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
12 minute ago
32 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
32 minute ago
46 minute ago
2 hours ago