2026 மார்ச் 07, சனிக்கிழமை

முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல்

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 11 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொல்கத்தா,

மேற்குவங்காள முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பர்பா மெதினிபுர் மாவட்டத்தின் ரியாபாரா பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள வந்தார். இவர்,அங்குள்ள கோவிலுக்கு வெளியே காரின் அருகே மம்தா நின்றிருந்தார். அப்போது, அவரை 4, 5 பேர் தாக்கியுள்ளனர்.

இதில் காலில் காயமடைந்த மம்தாவை பாதுகாவலர்கள் தூக்கிக் கொண்டு காரில் ஏற்றிக் கொண்டு, கொல்கத்தா விலுள்ள மருத்துவமனையில் அவரை அனுமதித்தார்கள்.

 பின்னர் மருத்துவமனைக்கு விரைந்த  செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ‘‘கார் கதவு அருகே நான் நின்றிருந்தேன்.

அப்போது, 4, 5 பேர் என்னைத் தள்ளிவிட்டு தாக்கினர். என்னை சூழ்ந்து கொண்டு கார் கதவு நோக்கி தள்ளிவிட்டனர். கதவில் எனது கால் மோதியது. இதில் காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் ’’ என்றார்.

மேற்குவங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.

சுவேந்துக்கு பதிலடி தரும் வகையில் அவர் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.

இதற்காக நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற் கான தனது வேட்புமனுவை மம்தா பானர்ஜி நேற்று தாக்கல் செய்தார். ஹல்டியா பகுதியிலுள்ள தேர்தல் அலுவலகத்துக்கு சென்று அவர் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .