Ilango Bharathy / 2022 டிசெம்பர் 14 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய பிரதேசம் குவாலியரின் மச்லி மண்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதான நபர் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் 25 வயதான பெண்ணொருவரைத் திருமணம் செய்துள்ளார்.
தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த குறித்த நபர், திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் “தனக்கு வரதட்சணையாக கார் ஒன்றினை வாங்கித் தருமாறும்,இல்லை எனில் உன்னை விவகாரத்து செய்து விடுவேன்” எனவும் மிரட்டி வந்துள்ளார் .
அது மட்டுமல்லாது உடல் ரீதியாகவும் மனைவியை நீண்ட நாட்களாகக் கொடுமைப் படுத்தி வந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான குறித்த பெண் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததோடு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால், தேனிலவு முதல் படுக்கையறை வரை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.
எனினும் அப் பெண் இதனைப் பெரிதாக எடுக்காததால் ஆத்திரமடைந்த குறித்த நபர் தமது அந்தரங்க வீடியோக்களை தனது பேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த வீடியோவானது வைரலாகத் தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் குடும்பத்தினர் இது குறித்து பொலிஸ் நிலையில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபரைக் கைது செய்து செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago