2026 மார்ச் 07, சனிக்கிழமை

மும்பை தாராவியை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 17 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை;

தாராவியில் ஒரேநாளில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்து உள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப் பட்டு இருந்தது. இதற்கு உலக சுகாதார அமைப்பே பாராட்டு தெரிவித்து இருந்தது.இந்தநிலையில் தற்போது அங்கு மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கடந்த சில நாட்களாக பாதிப்பு 10இக்கும் மேல் இருந்தது. நேற்று ஒரே நாளில் அங்கு புதிதாக 21 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தாராவியில் கடந்த அக்டோபர் 6ஆம் திகதி 22 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது 5 மாதங்களுக்கு பிறகு அங்கு 20இக்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தாராவியில் இதுவரை 4 ஆயிரத்து 279 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல தாதரில் புதிதாக 18 பேருக்கும், மாகிமில் 24 பேருக்கும் வைரஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் முறையே இதுவரை 5 ஆயிரத்து 293 பேர், 5 ஆயிரத்து 214 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .