A.K.M. Ramzy / 2021 மார்ச் 17 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரை,
4 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று (புதன்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அவர், மதுரை மேற்கு தொகுதி வேட்பாளர் சின்னம்மாள், மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் கோ.தளபதி, தெற்கு தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் புதூர் பூமிநாதன் மற்றும் மதுரை மத்திய தொகுதி தி.மு.க. வேட்பாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகிய 4 பேரை ஆதரித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் பகல் 11 மணி அளவில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
முன்னதாக அவர் நத்தம் மற்றும் வேடசந்தூர் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு மதுரைக்கு வருகிறார். மதுரையில் பழங்காநத்தம் பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் 4 தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் வகையில் மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. திறந்த வானில் நின்றபடி 4 வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரசாரம் செய்கிறார்.
20 minute ago
38 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
38 minute ago
50 minute ago
1 hours ago