Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூன் 26 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி 75 வயது மூதாட்டியிடம் ரூ.12½ லட்சம் மோசடி செய்த இளைஞர்கள் இருவரை மும்பை பொலிஸார் கைது செய்தனர்.
மும்பை மாட்டுங்கா பகுதியை சேர்ந்த 75 மூதாட்டியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சமூக வலைதளம் மூலம் ஆசாமி ஒருவர் தொடர்பு கொண்டு, தன்னை ஜெர்மனியை சேர்ந்தவர் என அறிமுகம் செய்து கொண்டார்.
மூதாட்டியும் அது மோசடி ஆசாமி என தெரியாமல் பேசி வந்தார். ஒருநாள் அந்த நபர் மூதாட்டியை திருமணம் செய்ய விரும்புவதாக ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டார். இதில் மூதாட்டி மயங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் மூதாட்டிக்கு விலை உயர்ந்த அன்பளிப்பை அனுப்பி இருப்பதாக தெரிவித்தார்.
பின்னர் அவர் கூட்டாளியை வைத்து சுங்க துறை அதிகாரி போல மூதாட்டியிடம் பேச வைத்தார். அந்த நபர் மூதாட்டியின் வெளிநாட்டு நண்பர் அனுப்பிய விலை உயர்ந்த அன்பளிப்புக்கு ரூ.3.85 இலட்சம் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். மூதாட்டியும் மோசடி நடப்பது தெரியாமல் அவர் கூறிய வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பினார்.
இந்தநிலையில் 8 நாட்களுக்கு பிறகு மோசடி ஆசாமி மீண்டும் மூதாட்டியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இலண்டனில் இருந்து புதுடெல்லி வந்ததாகவும், அதிகளவு வெளிநாட்டு பணம் இருந்ததால் சுங்க அதிகாரிகள் தன்னை பிடித்து வைத்து இருப்பதாக தெரிவித்தார். சுங்க அதிகாரிகள் காவலில் இருந்து வெளியே வர அவர்களுக்கு ரூ.8.78 இலட்சம் வரி செலுத்த வேண்டும் என கூறினார். இதையும் உண்மையென நம்பி அவர் கூறிய வங்கி கணக்குகளுக்கு மூதாட்டி பணத்தை அனுப்பினார். அதன்பிறகு மூதாட்டியால் சமூகவலைதள வெளிநாட்டு நண்பரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி சம்பவம் குறித்து மாட்டுங்கா பொலிஸில் புகார் அளித்தார். விசாரணையில் 26, 22 வயதான இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago