Freelancer / 2025 ஜனவரி 26 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசமைப்பை உருவாக்கிய மேன்மைமிக்க அனைத்து மனிதர்களையும் சிரம் தாழ்ந்து வணங்குகிறோம் என்று, இந்திய பிரதமர் மோடி கூறியுள்ளார்.
76ஆவது குடியரசு தின விழா, ஞாயிற்றுக்கிழமை (26) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தள பதிவில் கூறியதாவது,
“ஒரு ஜனநாயக நாடாக 75 பொன்னான ஆண்டுகள் நாம் திகழுவதை இன்று நாம் கொண்டாடி மகிழ்கிறோம். நமது அரசமைப்பை உருவாக்கிய மேன்மைமிக்க அனைத்து மனிதர்களையும் சிரம் தாழ்ந்து வணங்குகிறோம். ஜனநாயகத்திலும் ஒற்றுமையிலும் நமது பயணம் வேரூன்றி இருப்பதை அவர்கள் உறுதி செய்திருக்கின்றனர்.
“நமது அரசமைப்பின் சித்தாந்தங்களை பாதுகாப்பதற்கான நமது முயற்சிகளை இத்தருணம் பலப்படுத்துவதாக அமையட்டும். மேலும், செழிப்பானதொரு வலிமையான நாடாக இந்தியாவை கட்டமைக்கும் நமது முயற்சிகளுக்கும் இத்தருணம் பலத்தை தரட்டும். குடியரசு நாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
34 minute ago
45 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
45 minute ago
58 minute ago