2025 ஜூலை 19, சனிக்கிழமை

மோமோஸ் உண்ட ஒருவர் பலி

Freelancer   / 2023 ஜூலை 16 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், நண்பர்களுக்கிடையே நடந்த மோமோ சாப்பிடும் சவாலில் 150 மோமோக்களை சாப்பிட்ட பிபின் குமார் பாஸ்வான் என்ற நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான பாஸ்வான் மொபைல் பழுது பார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று வழக்கம்போல வேலைக்கு சென்ற அவர், தனது நண்பர்களை சந்தித்துள்ளார். அப்பொழுது அவர்களுக்கிடையே யார் அதிகபட்சமாக மோமோக்கள் சாப்பிடுகிறார்கள் என்று போட்டியிட முடிவு செய்தனர். பாஸ்வான் நண்பர்களின் சவாலை ஒப்புக்கொண்டு ஒரே நேரத்தில் 150 மோமோக்களை சாப்பிட்டுள்ளார்.

இதன் பின் மயங்கி விழுந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் ஆனால் மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் பிறகு போலீசார் வரவழைக்கப்பட்டு பசுவானின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாஸ்வானின் தந்தை, தனது மகனின் நண்பர்கள் அவரை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் வேண்டுமென்றே மோமோ சாப்பிடும் சவாலை சொன்னதாகவும், அதில் தனது மகனுக்கு விஷம் கொடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X