Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 மே 28 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூடியுபர் இர்பானின் கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் செங்கல்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இதில் பல்வேறு உணவகங்களுக்குச் சென்று அவற்றை சுவைத்து விமர்சனம் செய்து அதனைப் பதிவேற்றி வருகின்றார்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே நேற்று முன்தினம் இரவு யூடியூபர் இர்பானுக்கு சொந்தமான சொகுசு கார் ஒன்று மோதி 55 வயதான பத்மாவதி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை ஓட்டி வந்த அசாரூதின் என்பவரைக் கைது செய்து மறைமலை நகர் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து நடந்த போது யூடியூபர் இர்பான் காரில் இருந்தாரா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
3 hours ago
19 Jul 2025
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
19 Jul 2025
19 Jul 2025