Ilango Bharathy / 2022 ஏப்ரல் 07 , பி.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
78 வயதான மூதாட்டி ஒருவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் ராகுல் காந்திக்கு எழுதிக் கொடுத்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் புஷ்பா முஞ்சால். 78 வயதாகும் இவர் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இவர் அண்மையில் “தன்னிடம் உள்ள சொத்துக்களை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எழுதி வைப்பதாக கூறி அது தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் உயில் எழுதியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர் ” மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அவரது மகன் ராஜீவ் காந்தி ஆகியோர் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கும் தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனர்.
அதே குடும்பத்தைச் சேர்ந்த சோனியா மற்றும் ராகுல் காந்தி தற்போது நாட்டுக்கு சேவை செய்து வருவதோடு அதற்காகவே தங்களை அர்ப்பணித்து வருகின்றனர். இவர்களின் செயல்பாடு என்னை கவர்ந்தது. ராகுல் காந்தியின் திட்டங்கள், சிந்தனைகள் இந்திய நாட்டிற்கு நிச்சயம் தேவையானதாக இருக்கும். எனவே எனது அனைத்து சொத்துக்களையும் உயில் எழுதி கொடுக்கிறேன்" என்றார்.
இதனை அடுத்து குறித்த உயிலை ராகுல் காந்தி சார்பில் முன்னாள் உத்திரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் பிரீதம் சிங் பெற்றுக்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா முஞ்சாலுக்கு சொந்தமாக 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் 100 கிராம் தங்க நகைகள் இருப்பதாக உயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
35 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
35 minute ago
49 minute ago
2 hours ago