2025 ஜூலை 19, சனிக்கிழமை

ரூ. 2.5 இலட்சம் பெறுமதியான 4 மாம்பழங்கள் திருட்டு

Freelancer   / 2023 ஜூன் 20 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு கிலோ கிராம் ரூ. 2.5 இலட்சத்துக்கு விற்பனையாகும் விலை உயர்ந்த மாம்பழங்கள் ஒடிசா மாநிலத்தில் திருடு போயுள்ளன.

ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி, தனது விவசாய தோட்டத்தில் சுமார் 38 வகையிலான மாம்பழ ரகங்களை சாகுபடி செய்துள்ளார். அவற்றின் மதிப்பு குறித்து நன்கு அறிந்த அவர், அது குறித்த தகவலையும், மாம்பழங்களின் புகைப்படங்களையும் சமூக வலைதளங்கள் மூலம் வெளியிட்டார். இதில் விலை உயர்ந்த மாம்பழ ரகமும் அடங்கும்.

மாம்பழங்கள் குறித்து சமூக வலைதளங்களில்  பெருமையுடன் பகிர்ந்த அடுத்த சில மணி நேரங்களில், தோட்டத்தில் இருந்த விலை உயர்ந்த  மாம்பழங்கள் நான்கு திருடப்பட்டுள்ளன. இந்த ரக மாம்பழங்களின் விலை கிலோ ரூ.2.5 இலட்சம் என சொல்லப்படுகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X