2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விமானப்படை அதிகாரி

Ilango Bharathy   / 2023 ஜனவரி 23 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விமானப் படை அதிகாரியொருவர் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம்(21)  புது டெல்லி ரெயில் நிலையத்தில் மாலை 4.55 மணியளவில் மும்பை நோக்கி புறப்பட இருந்த ‘ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில்‘  வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் ஒருவர், குறித்த ரெயில் நிலையத்திற்கு தொலைபேசி மூலம்  தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்தனர். பின்னர் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து ரெயில் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இச் சோதனையில் சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் கிடைக்காததால் அது வெறும் புரளி என்ற முடிவுக்கு வந்தனர்.

இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் குறித்த தொலைபேசி வந்த இலக்கம் விமானப்படை அதிகாரி சுனில் சங்வான் என்பவருக்கு சொந்தமானது என்பதும், அவரும் அதே ரெயிலில் ஏறியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

 இதனையடுத்து அவரைப் பிடித்து பொலிஸார், விசாரணை நடத்திய போது ”தான் மது போதையிலேயே அவ்வாறு செய்ததாகவும், வீட்டை விட்டு தாமதமாகச்   சென்றதால், ரெயிலை தவறவிட்டுவிடுவோமே என்ற பயத்தில் இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார் குறித்த நபரைக் கைதுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .